குர்ஆன் 20:87 — தா.ஹா.
அவர்கள், “நாங்கள் வேண்டுமென்றே உம்மோடு கொண்ட ஒப்பந்தத்தை முறிக்க வில்லை. ஆனால் நாங்கள் ஆபரணங்களைக் கொண்டு சுமை சுமத்தப்பட்டோம், மேலும் எங்களுடைய சுமைகளை இறக்கி வைக்கத் தீர்மானித்தோம். இதனைத்தான் சாமிரியன் யோசனையாக முன்வைத்தான்” என்று கூறினார்கள்.
[20:86] கோபம் கொண்டவராகவும், மேலும் ஏமாற்றம் அடைந்தவராகவும் மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, ஒரு நல்ல வாக்குறுதியை உங்கள் இரட்சகர் உங்களுக்கு வாக்களிக்க வில்லையா? உங்களால் காத்திருக்க முடியவில்லையா? உங்கள் இரட்சகரிடமிருந்து கடுங்கோபத்திற்கு நீங்கள் உள்ளாக விரும்புகின்றீர்களா? இதனால் தான் என்னுடன் கொண்ட உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள் முறித்து விட்டீர்களா?” என்று கூறியவாறு திரும்பி வந்தார்.
[20:88] ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்துடன்* நிறைவு செய்யப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியை அவர்களுக்காக அவன் உருவாக்கினான். அவர்கள், “இதுதான் உங்கள் தெய்வமும், மேலும் மோஸஸின் தெய்வமும் ஆகும்” என்று கூறினார்கள். இவ்விதமாக, அவன் மறந்து விட்டான் .