குர்ஆன் 20:85 — தா.ஹா.
அவர், “நீர் புறப்பட்ட பின்னர் உம் சமூகத் தினரை நாம் சோதனையில் ஆழ்த்தினோம், ஆனால் சாமிரியன் அவர்களை வழிதவறச் செய்து விட்டான்” என்று கூறினார்.
[20:84] அவர், “அவர்கள் எனக்குப் பின்னால் நெருக்கமாகவே வந்து கொண்டிருக்கின்றனர். என் இரட்சகரே, நீர் திருப்தியடையும் பொருட்டு, நான் உம்மிடம் விரைந்துவந்தேன்” என்று கூறினார்.
[20:86] கோபம் கொண்டவராகவும், மேலும் ஏமாற்றம் அடைந்தவராகவும் மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, ஒரு நல்ல வாக்குறுதியை உங்கள் இரட்சகர் உங்களுக்கு வாக்களிக்க வில்லையா? உங்களால் காத்திருக்க முடியவில்லையா? உங்கள் இரட்சகரிடமிருந்து கடுங்கோபத்திற்கு நீங்கள் உள்ளாக விரும்புகின்றீர்களா? இதனால் தான் என்னுடன் கொண்ட உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள் முறித்து விட்டீர்களா?” என்று கூறியவாறு திரும்பி வந்தார்.