குர்ஆன் 20:98 — தா.ஹா.
கடவுள் தான் உங்களுடைய ஒரே தெய்வம்; அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லாத தனித்தவர். அவருடைய அறிவு எல்லா விஷயங்களையும் சூழ்ந்துள்ளது.
[20:97] அவர், “அப்படியென்றால் நீ சென்று விடு, மேலும் உனது வாழ்நாள் முழுவதும் அருகில் கூட வராதே. (உனது இறுதித் தீர்ப்பிற்காக) உன்னால் ஒருபோதும் தப்பிக்க முடியாத ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் உனக்கு இருக்கின்றது. நீ வழிபட்டு வந்த உன் தெய்வ த்தைப் பார்; நாங்கள் அதனை எரித்து மேலும் அதனைக் கடலில், அதிலேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்காக வீசி விடுவோம்” என்று கூறினார்.
[20:99] இவ்விதமாக, கடந்து சென்ற தலைமுறை யினரிலிருந்து சில செய்திகளை உமக்கு நாம் எடுத்துரைக்கின்றோம். நம்மிடமிருந்து ஒரு தூதுச் செய்தியை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.