குர்ஆன் 20:97 — தா.ஹா.
قالَ فَاذهَب فَإِنَّ لَكَ فِى الحَيوٰةِ أَن تَقولَ لا مِساسَ ۖ وَإِنَّ لَكَ مَوعِدًا لَن تُخلَفَهُ ۖ وَانظُر إِلىٰ إِلٰهِكَ الَّذى ظَلتَ عَلَيهِ عاكِفًا ۖ لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِى اليَمِّ نَسفًا
அவர், “அப்படியென்றால் நீ சென்று விடு, மேலும் உனது வாழ்நாள் முழுவதும் அருகில் கூட வராதே. (உனது இறுதித் தீர்ப்பிற்காக) உன்னால் ஒருபோதும் தப்பிக்க முடியாத ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் உனக்கு இருக்கின்றது. நீ வழிபட்டு வந்த உன் தெய்வ த்தைப் பார்; நாங்கள் அதனை எரித்து மேலும் அதனைக் கடலில், அதிலேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்காக வீசி விடுவோம்” என்று கூறினார்.
[20:96] அவன், “அவர்கள் காணமுடியாதவற்றை நான் கண்டேன். தூதர் நின்ற இடத்திலிருந்து ஒரு கைப்பிடி (தூசியை) நான் அள்ளினேன், மேலும் (தங்கக் கன்றுக்குட்டியின் கலவையாக) அதனைப் பயன்படுத்தினேன். இவ்வாறு செய்யும்படி தான் என் மனம் என்னைத் தூண்டியது*” என்று கூறினான்.
[20:98] கடவுள் தான் உங்களுடைய ஒரே தெய்வம்; அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லாத தனித்தவர். அவருடைய அறிவு எல்லா விஷயங்களையும் சூழ்ந்துள்ளது.