Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:96 — தா.ஹா.

அவன், “அவர்கள் காணமுடியாதவற்றை நான் கண்டேன். தூதர் நின்ற இடத்திலிருந்து ஒரு கைப்பிடி (தூசியை) நான் அள்ளினேன், மேலும் (தங்கக் கன்றுக்குட்டியின் கலவையாக) அதனைப் பயன்படுத்தினேன். இவ்வாறு செய்யும்படி தான் என் மனம் என்னைத் தூண்டியது*” என்று கூறினான்.

[20:95] அவர், “சாமிரியனே, உன்னிடம் உள்ள விஷயம் என்ன?” என்று கூறினார்.

[20:97] அவர், “அப்படியென்றால் நீ சென்று விடு, மேலும் உனது வாழ்நாள் முழுவதும் அருகில் கூட வராதே. (உனது இறுதித் தீர்ப்பிற்காக) உன்னால் ஒருபோதும் தப்பிக்க முடியாத ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் உனக்கு இருக்கின்றது. நீ வழிபட்டு வந்த உன் தெய்வ த்தைப் பார்; நாங்கள் அதனை எரித்து மேலும் அதனைக் கடலில், அதிலேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்காக வீசி விடுவோம்” என்று கூறினார்.