குர்ஆன் 21:31 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
மேலும் அவர்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு, அதன் மீது நிலைப்படுத்துபவைகளை நாம் அமைத்தோம், மேலும் அவர்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, நேரான நெடுஞ்சாலைகளை அதில் நாம் அமைத்தோம்.
[21:30] வானமும், பூமியும் முன்பு ஒரே திடப்பொருளாக இருந்ததை, வாழ்க்கை நிலைக்குக் கொண்டு வர நாம் வெடிக்கச் செய்தோம் என்பதை நம்ப மறுப்பவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? மேலும் அனைத்து உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?
[21:32] மேலும் பாதுகாக்கப்பட்ட ஒரு மேற்கூரையாக வானத்தை நாம் ஆக்கினோம். ஆயினும், அவற்றில் உள்ள அறிகுறிகள் அனைத்திலும் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின் றனர்.