குர்ஆன் 21:40 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
உண்மையில், அவர்களிடம் அது திடீரென வரும், மேலும், அவர்கள் முற்றிலும் திகைப் படைந்து விடுவார்கள். அவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது, அன்றியும் அவர்கள் அவகாசம் எதுவும் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
[21:39] நெருப்பிலிருந்து தங்களைத் தடுத்து விலக்கிக் கொள்ள முயற்சிக்கும் அந்நேரத்தை மட்டும் நம்ப மறுப்பவர்கள் நினைத்துப் பார்க்க முடிந்தால்; அவர்களுடைய முகங்களுக்கும் மற்றும் அவர்களுடைய முதுகுகளுக்கும் அப்பால்! அப்போது அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்.
[21:41] உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப் பட்டிருக்கின்றனர், மேலும், அதன் விளைவாக, அவர்களைப் பரிகசித்தவர்கள் அவர்களுடைய பரிகசிப்பிற்கான தண்டனைக்கு உள் ளானார்கள்.