குர்ஆன் 21:79 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் மற்றும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலை ஸாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டிற்கு பணிசெய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.
[21:78] மேலும் டேவிட்டும், ஸாலமனும், ஒருவருடைய பயிரை மற்றவருடைய செம்மறியாடு அழித்துவிட்டது சம்பந்தமாக ஒருமுறை அவர்கள் தீர்ப்பளித்த போது. அவர்களுடைய தீர்ப்பை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
[21:80] மேலும் போர்களில் உங்களைக் காத்துக் கொள்ள கேடயங்கள் செய்யும் கலையையும் அவருக்கு நாம் கற்றுத்தந்தோம். அப்பொழு தேனும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்களா?