குர்ஆன் 21:8 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
உணவு உட்கொள்ளாத உடல்களை அவர்களுக்கு நாம் தரவில்லை, அன்றியும் அவர்கள் மரணமற்றவர்களும் அல்ல.
[21:7] நம்மால் உள்ளுணர்வு அளிக்கப்பட்டவர்களாக ஆண்களை அன்றி உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. உங்களுக்கு தெரியவில்லை யென்றால், வேதத்தை அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
[21:9] நமது வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; நாம் நாடியோருடன் சேர்த்து அவர்களை நாம் காத்துக் கொண்டோம், மேலும் வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.