குர்ஆன் 21:9 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நமது வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; நாம் நாடியோருடன் சேர்த்து அவர்களை நாம் காத்துக் கொண்டோம், மேலும் வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.
[21:8] உணவு உட்கொள்ளாத உடல்களை அவர்களுக்கு நாம் தரவில்லை, அன்றியும் அவர்கள் மரணமற்றவர்களும் அல்ல.
[21:10] உங்களுடைய செய்தியைக் கொண்டதாக ஒரு வேதத்தை நாம் உமக்கு இறக்கி அனுப்பி இருக்கின்றோம். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?