குர்ஆன் 21:81 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
ஸாலமனுக்காக, காற்றை அவருடைய கட்டுப்பாட்டில் வீசிக் கொண்டும் மேலும் அடித்துக் கொண்டும் இருக்கப் பணித்தோம். அவர் விரும்பியவாறு, அவர் தேர்ந்தெடுத்த எந்த நிலப்பரப்பிற்கும் அதனைச் செலுத்த அவரால் முடிந்தது, மேலும் அத்தகைய நிலங்களை அவருக்காக நாம் அருள்புரிந் தோம்.அனைத்து விஷயங்களையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்.
[21:80] மேலும் போர்களில் உங்களைக் காத்துக் கொள்ள கேடயங்கள் செய்யும் கலையையும் அவருக்கு நாம் கற்றுத்தந்தோம். அப்பொழு தேனும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்களா?
[21:82] மேலும் சாத்தான்களில் (கடலில் அறுவடை செய்வதற்கென) அவருக்காக மூழ்கக் கூடியவை, அல்லது அவர் கட்டளையிடும் வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவை இருந்தன. அவருடைய சேவைக்கென அவற்றை நாம் பணித்தோம்.