குர்ஆன் 21:88 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம் அவருக்குப் பதிலளித்து, அந்த ஆபத்தான நிலையிலிருந்து அவரைக் காத்தோம்; இவ்விதமாகவே நம்பிக்கையாளர்களை நாம் காப்போம்.
[21:87] மேலும் ஜன்-நூன் (ஜோனா, “தனது பெயரில் ஒரு “ந” வைக் கொண்டவர்)”, நாம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது என்றெண்ணிக் கொண்டு, ஆட்சேபணையுடன் தன் இறைப் பணியைக் கை விட்டார். அவர் (பெரிய மீனின் வயிற்றின்) இருளிலிருந்து: “உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப் பவராக முடிந்தார்.
[21:89] மேலும் ஜக்கரியா தன் இரட்சகரை: “என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், வாரிசு இல்லாமல் என்னை ஆக்கி விடாதீர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.