குர்ஆன் 22:16 — புனித யாத்திரை
நாம் இவ்விதமாக இதிலே மிகத்தெளிவான வெளிப்பாடுகளையே வெளிப்படுத்தியுள் ளோம், பின்னர் தான் நாடுகின்றவர்களைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
[22:15] எவர் ஒருவர் இந்த வாழ்விலும் மறுவுலகிலும் தனக்குக் கடவுள் ஆதரவளிக்க முடியாதென எண்ணுகின்றாரோ, அவர் வானத்தில் (உள்ள தன் படைப்பாளரை) நோக்கி முற்றிலும் திரும்பிக் கொள்ளட்டும், மேலும் (வேறு எவர் ஒருவரையும் அவர் சார்ந்திருப்பதை) துண்டித் துக் கொள்ளட்டும். இத்திட்டம் அவரை வருத் திக் கொண்டிருக்கின்ற எந்த ஒன்றையும், நீக்கிவிடுவதை அப்போது அவர் காண்பார்.
[22:17] நம்பிக்கைகொண்டோர், யூதர்களாக இருப் பவர்கள், மதம்மாறியவர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிமதத்தவர்கள், மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், அவர்களுக்கிடையில் கடவுள் தான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்க இருப்பவர். கடவுள் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றார்.