குர்ஆன் 22:17 — புனித யாத்திரை
நம்பிக்கைகொண்டோர், யூதர்களாக இருப் பவர்கள், மதம்மாறியவர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிமதத்தவர்கள், மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், அவர்களுக்கிடையில் கடவுள் தான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்க இருப்பவர். கடவுள் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றார்.
[22:16] நாம் இவ்விதமாக இதிலே மிகத்தெளிவான வெளிப்பாடுகளையே வெளிப்படுத்தியுள் ளோம், பின்னர் தான் நாடுகின்றவர்களைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
[22:18] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் சூரியனும், சந்திரனும், நட்சத் திரங்களும், மலைகளும், மரங்களும், விலங்கு களும், மற்றும் பெரும்பாலான மனிதர்களும் கடவுள்-க்குச் சிரம்பணிகின்றனர் என்பதை நீங்கள் உணரவில்லையா? மக்களில் ஏராள மான மற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள் ளாகிவிட்டார்கள். எவனொருவனைக் கடவுள் இழிவுபடுத்துகின்றாரோ, அவனை எவரும் கண்ணியப்படுத்தமாட்டார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.