Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:18 — புனித யாத்திரை

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் சூரியனும், சந்திரனும், நட்சத் திரங்களும், மலைகளும், மரங்களும், விலங்கு களும், மற்றும் பெரும்பாலான மனிதர்களும் கடவுள்-க்குச் சிரம்பணிகின்றனர் என்பதை நீங்கள் உணரவில்லையா? மக்களில் ஏராள மான மற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள் ளாகிவிட்டார்கள். எவனொருவனைக் கடவுள் இழிவுபடுத்துகின்றாரோ, அவனை எவரும் கண்ணியப்படுத்தமாட்டார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.

[22:17] நம்பிக்கைகொண்டோர், யூதர்களாக இருப் பவர்கள், மதம்மாறியவர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிமதத்தவர்கள், மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், அவர்களுக்கிடையில் கடவுள் தான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்க இருப்பவர். கடவுள் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றார்.

[22:19] இதோ இரு கூட்டத்தினர் தங்கள் இரட்சகரைக் குறித்து நீண்ட சச்சரவு செய்து கொண்டிருக் கின்றனர். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்களுக்காகத் தைக்கப்பட்ட நெருப்பினா லான ஆடைகளை அவர்கள் கொண்டிருப் பார்கள். நரகதிரவம் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.