குர்ஆன் 22:2 — புனித யாத்திரை
அதனை நீங்கள் காணும் நாளில், பாலூட்டிக்கொண்டிருக்கும் ஒரு தாய் தன் குழந்தையைக் கைவிட்டு விடுவாள், மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கருவைச் சிதைத்துக் கொள்வாள். மக்களை அவர்கள் போதையில் இல்லாதிருந்த போதிலும், அவர்கள் போதையிலிருப்பவர்களைப் போல் தள்ளாடிய வர்களாக நீர் காண்பீர். இதன் காரணமாவது, கடவுள்-ன் தண்டனை மிகவும் அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.
[22:1] மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்க வேண்டும், ஏனெனில், அந்த நேரத்தின் அதிர்வானது படுபயங்கரமான ஒன்றாகும்.
[22:3] மனிதர்களில், அறிவின்றிக் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் கலகக்காரனான ஒவ்வொரு சாத்தா னையும் பின்பற்றுகின்றனர்.