Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:24 — புனித யாத்திரை

நல்ல வார்த்தைகளின் பால் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்; மிகவும் புகழுக்குரியவரின் பாதையில் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

[22:23] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிப்பார். தங்கத்திலும் முத்துக்களிலுமான காப்புகள் கொண்டு அங்கே அவர்கள் அலங்கரிக்கப் படுவார்கள், மேலும் அங்கே அவர்களுடைய ஆடைகள் பட்டாக இருக்கும்.

[22:25] நிச்சயமாக, நம்ப மறுத்து மேலும் மற்றவர் களைக் கடவுள்-ன் பாதையிலிருந்தும், மக்கள் அனைவருக்காகவும், நாம் நியமித்த புனித மஸ்ஜிதை விட்டும் துரத்துபவர்கள்-அவர்கள் ஊர்வாசிகளோ அல்லது தரிசனத்திற்கு வருபவர்களோ-மேலும் அதனை மாசுபடுத்தவும், அதனை சீர்கெடுக்கவும் முயற்ச்சிக்கின்ற அவர்களை வலிநிறைந்த தண்டனை கொண்டு நாம் வேதனை செய்வோம்.