Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:25 — புனித யாத்திரை

நிச்சயமாக, நம்ப மறுத்து மேலும் மற்றவர் களைக் கடவுள்-ன் பாதையிலிருந்தும், மக்கள் அனைவருக்காகவும், நாம் நியமித்த புனித மஸ்ஜிதை விட்டும் துரத்துபவர்கள்-அவர்கள் ஊர்வாசிகளோ அல்லது தரிசனத்திற்கு வருபவர்களோ-மேலும் அதனை மாசுபடுத்தவும், அதனை சீர்கெடுக்கவும் முயற்ச்சிக்கின்ற அவர்களை வலிநிறைந்த தண்டனை கொண்டு நாம் வேதனை செய்வோம்.

[22:24] நல்ல வார்த்தைகளின் பால் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்; மிகவும் புகழுக்குரியவரின் பாதையில் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

[22:26] புனிதப்பள்ளியை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: “ என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணையாக வழிபட வேண்டாம், என்னுடைய புனிதப் பள்ளியை, அதனைத் தரிசிக்க வருவோருக்காகவும், அதன் அருகில் வசிப்போருக்காகவும், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காகவும் தூய்மைப்படுத்துவீராக.