குர்ஆன் 22:26 — புனித யாத்திரை
புனிதப்பள்ளியை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: “ என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணையாக வழிபட வேண்டாம், என்னுடைய புனிதப் பள்ளியை, அதனைத் தரிசிக்க வருவோருக்காகவும், அதன் அருகில் வசிப்போருக்காகவும், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காகவும் தூய்மைப்படுத்துவீராக.
[22:25] நிச்சயமாக, நம்ப மறுத்து மேலும் மற்றவர் களைக் கடவுள்-ன் பாதையிலிருந்தும், மக்கள் அனைவருக்காகவும், நாம் நியமித்த புனித மஸ்ஜிதை விட்டும் துரத்துபவர்கள்-அவர்கள் ஊர்வாசிகளோ அல்லது தரிசனத்திற்கு வருபவர்களோ-மேலும் அதனை மாசுபடுத்தவும், அதனை சீர்கெடுக்கவும் முயற்ச்சிக்கின்ற அவர்களை வலிநிறைந்த தண்டனை கொண்டு நாம் வேதனை செய்வோம்.
[22:27] “மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை* மேற் கொள்ளவேண்டுமெனப் பிரகடனம்செய்வீராக. அவர்கள் உம்மிடம் நடந்தவர்களாக அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்குவரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்.”