Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:27 — புனித யாத்திரை

“மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை* மேற் கொள்ளவேண்டுமெனப் பிரகடனம்செய்வீராக. அவர்கள் உம்மிடம் நடந்தவர்களாக அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்குவரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்.”

[22:26] புனிதப்பள்ளியை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: “ என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணையாக வழிபட வேண்டாம், என்னுடைய புனிதப் பள்ளியை, அதனைத் தரிசிக்க வருவோருக்காகவும், அதன் அருகில் வசிப்போருக்காகவும், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காகவும் தூய்மைப்படுத்துவீராக.

[22:28] அவர்கள் வணிகப்பலன்களைத் தேடிக் கொள்ளலாம், மேலும் கால்நடைகளை அவர் களுக்கு வழங்கியமைக்காக குறிப்பிட்ட நாட்களின் போது கடவுள்-ன் பெயரை அவர் கள் நினைவு கூர வேண்டும். “அதிலிருந்து உண்ணுங்கள் மேலும் சோர்வடைந்தவர் களுக்கும் மற்றும் ஏழைகளுக்கும் உணவளி யுங்கள்.”