குர்ஆன் 22:47 — புனித யாத்திரை
தண்டனையைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடுகின்றனர், மேலும் கடவுள் ஒருபோதும் தனது முன்னறிவிப்பை நிறை வேற்றத் தவறமாட்டார். உம்முடைய இரட் சகரின் ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.
[22:46] அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து, பின்னர் புரிந்து கொள்வதற்குத் தங்கள் மனங்களையும், கேட்பதற்குத் தங்கள் காதுகளையும் பயன் படுத்தவில்லையா? உண்மையில், உண்மையான குருட்டுத்தனம் என்பது கண்களின் குருட்டுத் தனம் அல்ல, ஆனால் நெஞ்சங்களில் உள்ள இதயங்களின் குருட்டுத்தனமே ஆகும்.
[22:48] கடந்த காலத்தில் பல சமூகம் தீமைகள் புரிந்தது, மேலும் நான் அவ்வாறே அவர்களைச் சிறிது காலம் தொடர்ந்து அழைத்துச்சென்றேன், பின்னர் நான் அவர்களைத் தண்டித்தேன். இறுதி விதி என் வசமே உள்ளது.