Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:46 — புனித யாத்திரை

அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து, பின்னர் புரிந்து கொள்வதற்குத் தங்கள் மனங்களையும், கேட்பதற்குத் தங்கள் காதுகளையும் பயன் படுத்தவில்லையா? உண்மையில், உண்மையான குருட்டுத்தனம் என்பது கண்களின் குருட்டுத் தனம் அல்ல, ஆனால் நெஞ்சங்களில் உள்ள இதயங்களின் குருட்டுத்தனமே ஆகும்.

[22:45] பல சமூகத்தை அவர்களுடைய தீய செயல் களின் காரணமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் முற்றிலும் அழிவுகளுடனும், பாழடைந்த கிணறுகளுடனும், வெறுமையான மாளிகைகளுடனும் முடிந்து போயினர்.

[22:47] தண்டனையைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடுகின்றனர், மேலும் கடவுள் ஒருபோதும் தனது முன்னறிவிப்பை நிறை வேற்றத் தவறமாட்டார். உம்முடைய இரட் சகரின் ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.