குர்ஆன் 22:51 — புனித யாத்திரை
நம்முடைய வெளிப்பாடுகளுக்குச் சவால் விட முயற்சி செய்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் நரகிற்கு உள்ளாகின்றார்கள்.
[22:50] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோர், மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதோர் பிரதிபலனுக்கும் தகுதி பெற்று விட்டார்கள்.
[22:52] உமக்கு முன்னர் எந்தத் தூதரையோ, அன்றி வேதம் வழங்கப்பட்டவரையோ, அவருடைய விருப்பங்களில் சாத்தானின் தலையீடு இல்லாமல் நாம் அனுப்பவில்லை. பின்னர் சாத்தான் செய்தவற்றை கடவுள் பயனற்றதாக ஆக்கி விடுகின்றார். கடவுள் அவருடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.*