Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:52 — புனித யாத்திரை

உமக்கு முன்னர் எந்தத் தூதரையோ, அன்றி வேதம் வழங்கப்பட்டவரையோ, அவருடைய விருப்பங்களில் சாத்தானின் தலையீடு இல்லாமல் நாம் அனுப்பவில்லை. பின்னர் சாத்தான் செய்தவற்றை கடவுள் பயனற்றதாக ஆக்கி விடுகின்றார். கடவுள் அவருடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.*

[22:51] நம்முடைய வெளிப்பாடுகளுக்குச் சவால் விட முயற்சி செய்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் நரகிற்கு உள்ளாகின்றார்கள்.

[22:53] இவ்விதமாக அவர் சாத்தானின் சூழ்ச்சியை, தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி யவர்களுக்கும், மேலும் இதயங்கள் கடின மாகிப் போனவர்களுக்கும் ஒரு சோதனையாக அமைத்து விடுகின்றார், தீயவர்கள் எதிரணி யில் தான் இருந்தாக வேண்டும்.