Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:53 — புனித யாத்திரை

இவ்விதமாக அவர் சாத்தானின் சூழ்ச்சியை, தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி யவர்களுக்கும், மேலும் இதயங்கள் கடின மாகிப் போனவர்களுக்கும் ஒரு சோதனையாக அமைத்து விடுகின்றார், தீயவர்கள் எதிரணி யில் தான் இருந்தாக வேண்டும்.

[22:52] உமக்கு முன்னர் எந்தத் தூதரையோ, அன்றி வேதம் வழங்கப்பட்டவரையோ, அவருடைய விருப்பங்களில் சாத்தானின் தலையீடு இல்லாமல் நாம் அனுப்பவில்லை. பின்னர் சாத்தான் செய்தவற்றை கடவுள் பயனற்றதாக ஆக்கி விடுகின்றார். கடவுள் அவருடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.*

[22:54] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர் கள் உம் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், பின்னர் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்களுடைய இதயங்கள் முழுமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும். மிகவும் உறுதி யாக, நம்பிக்கையாளர்களைக் கடவுள் சரி யான பாதையில் வழிநடத்துகின்றார்.