குர்ஆன் 22:54 — புனித யாத்திரை
அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர் கள் உம் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், பின்னர் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்களுடைய இதயங்கள் முழுமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும். மிகவும் உறுதி யாக, நம்பிக்கையாளர்களைக் கடவுள் சரி யான பாதையில் வழிநடத்துகின்றார்.
[22:53] இவ்விதமாக அவர் சாத்தானின் சூழ்ச்சியை, தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி யவர்களுக்கும், மேலும் இதயங்கள் கடின மாகிப் போனவர்களுக்கும் ஒரு சோதனையாக அமைத்து விடுகின்றார், தீயவர்கள் எதிரணி யில் தான் இருந்தாக வேண்டும்.
[22:55] நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை, நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை, அல்லது பயங்கரமானதொரு நாளின் தண்டனை அவர் களிடம் வரும்வரை, அவர்கள் தொடர்ந்து தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கிய வண்ணமே இருப்பார்கள்.