குர்ஆன் 23:28 — நம்பிக்கையாளர்கள்
“உம்முடன் இருப்பவர்களோடு சேர்ந்து, படகின் மீது நீர் அமர்ந்து விட்டவுடன் ‘பாவிகளான மக்களிடமிருந்து நம்மைக் காக்கின்ற, கடவுள்-ஐப் புகழுங்கள்’ என்று நீர் கூற வேண்டும்.
[23:27] பின்னர் நாம் அவருக்கு உள்ளுணர்வு அளித்தோம்: “நம்முடைய கவனமான கண்களின் கீழே, மேலும் நம்முடைய உள்ளுணர்விற்கு ஏற்ப படகைக்* கட்டுவீராக. நமது கட்டளை வரும்போது, மேலும் சுற்றுச்சூழல் கொதிப்படையும் போது, (உம்முடைய வீட்டுப் பிராணிகளில்) ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியையும், மேலும் அழியவேண்டும் என்று மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர, உம் குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக. வரம்பு மீறியவர்கள் சார்பாக என்னிடம் பேசாதீர்; அவர்கள் மூழ்கடிக் கப்படுவார்கள்.
[23:29] “மேலும், ‘ என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரை யிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்,’” என்று கூறுவீராக.