குர்ஆன் 23:60 — நம்பிக்கையாளர்கள்
தங்களுடைய தர்மங்களை அவர்கள் கொடுத்தவர்களாக, அவர்களுடைய இதயங்கள் முற்றிலும் பயபக்தியோடிருக்கின்றன. ஏனெனில் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் வரவழைக் கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து இருக்கின்றனர்,
[23:59] மேலும் தங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளாதவர்கள்,
[23:61] அவர்கள் நன்னெறியான செயல்கள் புரிய ஆவலுடன் உள்ளனர்; அவற்றைச் செய்ய அவர்கள் போட்டியிடுகின்றனர்.