Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:71 — நம்பிக்கையாளர்கள்

உண்மையில், சத்தியம் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்திருந்தால், வானங்கள் மற்றும் பூமியில் முற்றிலும் குழப்பமே இருந்திருக்கும்; அவற்றில் உள்ள ஒவ்வொன்றும் சீர்குலைந்து போயிருக்கும். அவர்களுக்குரிய சான்றை நாம் அவர் களுக்குக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் தங்களுக்குரிய சான்றை அலட்சியம் செய் கின்றனர்.

[23:70] அவர் புத்திசுவாதீனமில்லாதவர் என்று அவர்கள் தீர்மானித்து விட்டனரா? உண்மையில், அவர்களிடம் சத்தியத்தை அவர் கொண்டு வந்திருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிக மானோர் சத்தியத்தை வெறுக்கின்றனர்.

[23:72] அவர்களிடம் நீர் ஒரு கூலி கேட்கின்றீரா? உம் இரட்சகரின் கூலி மிகவும் மேலானதாகும். அவர்தான் வழங்குவோரில் மிகச்சிறந்தவர்.