குர்ஆன் 24:11 — ஒளி
உங்களில் ஒரு கும்பல் பெரியதொரு பொய் யைக் கொண்டு வந்தது*. அது உங்களுக்குக் கெட்டதாக இருந்தது என்று நீங்கள் நினைக்காதீர்கள்; மாறாக, அது உங்களுக்கு நல்லதாகவே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில், அவர்களில் ஒவ்வொருவனும் குற்றத்தில் அவனுடைய பங்கைச் சம்பாதித்துக் கொண்டான். சம்பவம் முழுவதையும் துவக்கிய வனைப் பொறுத்தவரை, அவன் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டான்.
[24:10] இது உங்கள் பால் கடவுள்-ன் அருளும் கருணையுமாகும். கடவுள் மீட்பவர், ஞானம் மிக்கவர்.
[24:12] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது, நம்பிக்கை கொண்ட ஆண்களும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும், மேலும், “ இது வெளிப் படையானதொரு பெரும் பொய்” என்று கூறியிருக்க வேண்டும்.