Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:12 — ஒளி

அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது, நம்பிக்கை கொண்ட ஆண்களும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும், மேலும், “ இது வெளிப் படையானதொரு பெரும் பொய்” என்று கூறியிருக்க வேண்டும்.

[24:11] உங்களில் ஒரு கும்பல் பெரியதொரு பொய் யைக் கொண்டு வந்தது*. அது உங்களுக்குக் கெட்டதாக இருந்தது என்று நீங்கள் நினைக்காதீர்கள்; மாறாக, அது உங்களுக்கு நல்லதாகவே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில், அவர்களில் ஒவ்வொருவனும் குற்றத்தில் அவனுடைய பங்கைச் சம்பாதித்துக் கொண்டான். சம்பவம் முழுவதையும் துவக்கிய வனைப் பொறுத்தவரை, அவன் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டான்.

[24:13] நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்தால் மட்டும் (நீங்கள் அவர்களை நம்பலாம்). அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரத் தவறினால், அப்போது அவர்கள், கடவுள்-ஐப் பொறுத்தவரை, பொய்யர்கள் ஆவார்கள்.