குர்ஆன் 24:13 — ஒளி
நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்தால் மட்டும் (நீங்கள் அவர்களை நம்பலாம்). அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரத் தவறினால், அப்போது அவர்கள், கடவுள்-ஐப் பொறுத்தவரை, பொய்யர்கள் ஆவார்கள்.
[24:12] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது, நம்பிக்கை கொண்ட ஆண்களும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும், மேலும், “ இது வெளிப் படையானதொரு பெரும் பொய்” என்று கூறியிருக்க வேண்டும்.
[24:14] கடவுள்-ன் அருளும், மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவருடைய கருணையும் உங்கள் பால் இல்லாதிருந்தால், இச்சம்பவத்தின் காரணமாக மகத்தானதொரு தண்டனையால் துயருற்று இருப்பீர்கள்.