குர்ஆன் 24:14 — ஒளி
கடவுள்-ன் அருளும், மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவருடைய கருணையும் உங்கள் பால் இல்லாதிருந்தால், இச்சம்பவத்தின் காரணமாக மகத்தானதொரு தண்டனையால் துயருற்று இருப்பீர்கள்.
[24:13] நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்தால் மட்டும் (நீங்கள் அவர்களை நம்பலாம்). அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரத் தவறினால், அப்போது அவர்கள், கடவுள்-ஐப் பொறுத்தவரை, பொய்யர்கள் ஆவார்கள்.
[24:15] உங்களுடைய சொந்த நாவுகளால் அதனை நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டீர்கள், மேலும் உங்களில் மற்றவர்கள் சான்றின்றி உங்கள் வாய்களால் அதனைத் திரும்பக் கூறினீர்கள். அதனை சாதாரணமானதாக நீங்கள் நினைத் தீர்கள், ஆயினும் கடவுள்-ஐப் பொறுத்தவரை, அது மிகப்பெரியதாக இருந்தது.