குர்ஆன் 24:23 — ஒளி
நிச்சயமாக, திருமணமான பக்தியுடைய நம்பிக்கை கொண்ட பெண்களைப் பொய் யாகக் குற்றம் சாட்டுபவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் படுபயங்கரமானதொரு தண்டனைக் குள்ளாகி விட்டனர்.
[24:22] உங்களில் வளமும் மற்றும் செல்வமும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உறவினர்கள், ஏழைகள் மற்றும் கடவுள்-ன் நிமித்தம் குடி பெயர்ந்தவர்களின் பால் தர்மவான்களாகத் திகழ வேண்டும். அவர்கள், கனிவுடனும், சகிப்புத் தன்மை யுடனும், அவர்களை நடத்திட வேண்டும்; கடவுள்-ன் மன்னிப்பை அடைய நீங்கள் விரும்பவில்லையா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[24:24] அவர்களுடைய சொந்த நாவுகளும், கரங்களும், மற்றும் பாதங்களும், அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறுகின்ற அந்நாள் வரும்.