Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:22 — ஒளி

உங்களில் வளமும் மற்றும் செல்வமும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உறவினர்கள், ஏழைகள் மற்றும் கடவுள்-ன் நிமித்தம் குடி பெயர்ந்தவர்களின் பால் தர்மவான்களாகத் திகழ வேண்டும். அவர்கள், கனிவுடனும், சகிப்புத் தன்மை யுடனும், அவர்களை நடத்திட வேண்டும்; கடவுள்-ன் மன்னிப்பை அடைய நீங்கள் விரும்பவில்லையா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[24:21] நம்பிக்கை கொண்டோரே, சாத்தானின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். சாத்தானின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற எவரொருவ னும், அவன் தீமையையும், ஒழுக்கக்கேட்டையுமே ஆதரிக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள்-ன் அருளும் மற்றும் அவருடைய கருணையும் உங்கள் மீது இல்லாது இருந்திருக்குமேயானால், உங்களில் எவருமே தூய்மையடைந்திருக்க மாட்டீர்கள். ஆனால் தான் நாடுகின்றோரைக் கடவுள் தூய்மைப் படுத்துகின்றார். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.

[24:23] நிச்சயமாக, திருமணமான பக்தியுடைய நம்பிக்கை கொண்ட பெண்களைப் பொய் யாகக் குற்றம் சாட்டுபவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் படுபயங்கரமானதொரு தண்டனைக் குள்ளாகி விட்டனர்.