குர்ஆன் 24:21 — ஒளி
நம்பிக்கை கொண்டோரே, சாத்தானின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். சாத்தானின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற எவரொருவ னும், அவன் தீமையையும், ஒழுக்கக்கேட்டையுமே ஆதரிக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள்-ன் அருளும் மற்றும் அவருடைய கருணையும் உங்கள் மீது இல்லாது இருந்திருக்குமேயானால், உங்களில் எவருமே தூய்மையடைந்திருக்க மாட்டீர்கள். ஆனால் தான் நாடுகின்றோரைக் கடவுள் தூய்மைப் படுத்துகின்றார். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[24:20] கடவுள் தனது அருளையும் மற்றும் கருணை யையும் கொண்டு உங்கள் மேல் பொழி கின்றார். நம்பிக்கையாளர்கள் பால் கடவுள் மிக்க கனிவானவராகவும், மிக்க கருணை யாளராகவும் இருக்கின்றார்.
[24:22] உங்களில் வளமும் மற்றும் செல்வமும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உறவினர்கள், ஏழைகள் மற்றும் கடவுள்-ன் நிமித்தம் குடி பெயர்ந்தவர்களின் பால் தர்மவான்களாகத் திகழ வேண்டும். அவர்கள், கனிவுடனும், சகிப்புத் தன்மை யுடனும், அவர்களை நடத்திட வேண்டும்; கடவுள்-ன் மன்னிப்பை அடைய நீங்கள் விரும்பவில்லையா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.