குர்ஆன் 24:27 — ஒளி
நம்பிக்கை கொண்டோரே, உங்களுடையதைத் தவிர வேறு வீடுகளில், அவற்றில் வசிப்பவர் களின் அனுமதி பெறாமலும், மேலும் அவர்களை வாழ்த்தாமலும் நீங்கள் உள்ளே நுழையாதீர்கள். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இதுவே உங்களுக்கு சிறப்பான தாகும்.
[24:26] கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு, மற்றும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கு, மேலும் நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கு, மற்றும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கு. இரண்டாவதாக கூறப்பட்டவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர்களாக உள்ளனர்.அவர்கள் மன்னிப்பையும் மேலும் தாராளமானதொரு வெகுமதியையும் அடைந்து விட்டார்கள்.
[24:28] அவற்றில் எவர் ஒருவரையும் நீங்கள் காணா விட்டால், அனுமதியைப் பெறும்வரை நீங்கள் அவற்றினுள் நுழையாதீர்கள் “ திரும்பிச் செல்லுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். இதுவே உங்களுக்குத் தூய்மையானது. நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.