குர்ஆன் 24:28 — ஒளி
அவற்றில் எவர் ஒருவரையும் நீங்கள் காணா விட்டால், அனுமதியைப் பெறும்வரை நீங்கள் அவற்றினுள் நுழையாதீர்கள் “ திரும்பிச் செல்லுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். இதுவே உங்களுக்குத் தூய்மையானது. நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:27] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடையதைத் தவிர வேறு வீடுகளில், அவற்றில் வசிப்பவர் களின் அனுமதி பெறாமலும், மேலும் அவர்களை வாழ்த்தாமலும் நீங்கள் உள்ளே நுழையாதீர்கள். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இதுவே உங்களுக்கு சிறப்பான தாகும்.
[24:29] எவரும் வசிக்காத வீடுகளில், உங்களுக் குரியது ஏதேனும் இருந்தால் அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றையும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார்.