குர்ஆன் 24:29 — ஒளி
எவரும் வசிக்காத வீடுகளில், உங்களுக் குரியது ஏதேனும் இருந்தால் அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றையும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார்.
[24:28] அவற்றில் எவர் ஒருவரையும் நீங்கள் காணா விட்டால், அனுமதியைப் பெறும்வரை நீங்கள் அவற்றினுள் நுழையாதீர்கள் “ திரும்பிச் செல்லுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். இதுவே உங்களுக்குத் தூய்மையானது. நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:30] நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் (மேலும் பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது) என்றும், மேலும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவீராக. இதுவே அவர்க ளுக்குத் தூய்மையுடையதாகும். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.