Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:30 — ஒளி

நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் (மேலும் பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது) என்றும், மேலும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவீராக. இதுவே அவர்க ளுக்குத் தூய்மையுடையதாகும். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[24:29] எவரும் வசிக்காத வீடுகளில், உங்களுக் குரியது ஏதேனும் இருந்தால் அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றையும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார்.

[24:31] மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதுடன், தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கூறுவீராக. அவசியமானவற்றைத் தவிர, தங்களுடைய உடல்களின் எந்தப் பகுதியையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் தங்க ளுடைய மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடைய கணவர்கள், அவர்களுடைய தந்தையர், அவர்களுடைய கணவர்களின் தந்தையர், அவர்களுடைய மகன்கள், அவர்களுடைய கணவர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரர்கள், அவர்களுடைய சகோதரர் களின் மகன்கள், அவர்களுடைய சகோதரி களின் மகன்கள், மற்றப் பெண்கள், பாலியல் உந்துதல் அற்றுப்போன ஆண் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள், அல்லது பருவம் அடையாத குழந்தைகள் முன்னிலையில் தவிர இவ்விதியைத் தளர்த்த வேண்டாம். அவர்கள் நடக்கும் பொழுது தங்களுடைய உடல்களின் குறிப்பிட்ட விவரங்களைக் குலுக்கி வெளிப் படுத்துவதற்காகத் தங்கள் பாதங்களை அதிரச் செய்ய வேண்டாம். நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் வெற்றியடையும்* பொருட்டு, கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும்.