குர்ஆன் 24:31 — ஒளி
وَقُل لِلمُؤمِنٰتِ يَغضُضنَ مِن أَبصٰرِهِنَّ وَيَحفَظنَ فُروجَهُنَّ وَلا يُبدينَ زينَتَهُنَّ إِلّا ما ظَهَرَ مِنها ۖ وَليَضرِبنَ بِخُمُرِهِنَّ عَلىٰ جُيوبِهِنَّ ۖ وَلا يُبدينَ زينَتَهُنَّ إِلّا لِبُعولَتِهِنَّ أَو ءابائِهِنَّ أَو ءاباءِ بُعولَتِهِنَّ أَو أَبنائِهِنَّ أَو أَبناءِ بُعولَتِهِنَّ أَو إِخوٰنِهِنَّ أَو بَنى إِخوٰنِهِنَّ أَو بَنى أَخَوٰتِهِنَّ أَو نِسائِهِنَّ أَو ما مَلَكَت أَيمٰنُهُنَّ أَوِ التّٰبِعينَ غَيرِ أُولِى الإِربَةِ مِنَ الرِّجالِ أَوِ الطِّفلِ الَّذينَ لَم يَظهَروا عَلىٰ عَورٰتِ النِّساءِ ۖ وَلا يَضرِبنَ بِأَرجُلِهِنَّ لِيُعلَمَ ما يُخفينَ مِن زينَتِهِنَّ ۚ وَتوبوا إِلَى اللَّهِ جَميعًا أَيُّهَ المُؤمِنونَ لَعَلَّكُم تُفلِحونَ
மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதுடன், தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கூறுவீராக. அவசியமானவற்றைத் தவிர, தங்களுடைய உடல்களின் எந்தப் பகுதியையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் தங்க ளுடைய மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடைய கணவர்கள், அவர்களுடைய தந்தையர், அவர்களுடைய கணவர்களின் தந்தையர், அவர்களுடைய மகன்கள், அவர்களுடைய கணவர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரர்கள், அவர்களுடைய சகோதரர் களின் மகன்கள், அவர்களுடைய சகோதரி களின் மகன்கள், மற்றப் பெண்கள், பாலியல் உந்துதல் அற்றுப்போன ஆண் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள், அல்லது பருவம் அடையாத குழந்தைகள் முன்னிலையில் தவிர இவ்விதியைத் தளர்த்த வேண்டாம். அவர்கள் நடக்கும் பொழுது தங்களுடைய உடல்களின் குறிப்பிட்ட விவரங்களைக் குலுக்கி வெளிப் படுத்துவதற்காகத் தங்கள் பாதங்களை அதிரச் செய்ய வேண்டாம். நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் வெற்றியடையும்* பொருட்டு, கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும்.
[24:30] நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் (மேலும் பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது) என்றும், மேலும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவீராக. இதுவே அவர்க ளுக்குத் தூய்மையுடையதாகும். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[24:32] உங்களில் திருமணமாகாத நபர்களைத் திருமணம் புரிந்து கொள்ள நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருந்தால், உங்கள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிலுள்ள நன்னெறியுடையவர்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கடவுள் தன் அருளிலிருந்து அவர்களைச் செல்வந்தர்களாக்குவார். கடவுள் தாராள மானவர், அறிந்திருப்பவர்.