Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:32 — ஒளி

உங்களில் திருமணமாகாத நபர்களைத் திருமணம் புரிந்து கொள்ள நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருந்தால், உங்கள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிலுள்ள நன்னெறியுடையவர்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கடவுள் தன் அருளிலிருந்து அவர்களைச் செல்வந்தர்களாக்குவார். கடவுள் தாராள மானவர், அறிந்திருப்பவர்.

[24:31] மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதுடன், தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கூறுவீராக. அவசியமானவற்றைத் தவிர, தங்களுடைய உடல்களின் எந்தப் பகுதியையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் தங்க ளுடைய மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடைய கணவர்கள், அவர்களுடைய தந்தையர், அவர்களுடைய கணவர்களின் தந்தையர், அவர்களுடைய மகன்கள், அவர்களுடைய கணவர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரர்கள், அவர்களுடைய சகோதரர் களின் மகன்கள், அவர்களுடைய சகோதரி களின் மகன்கள், மற்றப் பெண்கள், பாலியல் உந்துதல் அற்றுப்போன ஆண் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள், அல்லது பருவம் அடையாத குழந்தைகள் முன்னிலையில் தவிர இவ்விதியைத் தளர்த்த வேண்டாம். அவர்கள் நடக்கும் பொழுது தங்களுடைய உடல்களின் குறிப்பிட்ட விவரங்களைக் குலுக்கி வெளிப் படுத்துவதற்காகத் தங்கள் பாதங்களை அதிரச் செய்ய வேண்டாம். நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் வெற்றியடையும்* பொருட்டு, கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும்.

[24:33] திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்கள், கடவுள் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கும்வரை ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.உங்கள் ஊழியர்களில் திருமணம் செய்து கொள்வதற்காக விடுதலையடைய விரும்புபவர்களுக்கு, அவர்கள் நேர்மையான வர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டால், அவர்களுடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு அவர் அளித்துள்ள கடவுள்-ன் பணத்திலிருந்து, அவர்களுக்குக் கொடுங்கள். உங்களுடைய பெண் களை, அவர்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், இவ்வுலகப் பொருட்களை தேடி அவர்களை விபச்சாரம் செய்வதற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம். எவரேனும் அவர்களை நிர்பந்தித்தால், பின்னர் கடவுள், அவர்கள் நிர்பந்திக்கப்படுவதைக் காண்பதால், மன்னிப்பவராகவும் கருணையா ளராகவும் இருக்கின்றார்.