குர்ஆன் 24:33 — ஒளி
திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்கள், கடவுள் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கும்வரை ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.உங்கள் ஊழியர்களில் திருமணம் செய்து கொள்வதற்காக விடுதலையடைய விரும்புபவர்களுக்கு, அவர்கள் நேர்மையான வர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டால், அவர்களுடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு அவர் அளித்துள்ள கடவுள்-ன் பணத்திலிருந்து, அவர்களுக்குக் கொடுங்கள். உங்களுடைய பெண் களை, அவர்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், இவ்வுலகப் பொருட்களை தேடி அவர்களை விபச்சாரம் செய்வதற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம். எவரேனும் அவர்களை நிர்பந்தித்தால், பின்னர் கடவுள், அவர்கள் நிர்பந்திக்கப்படுவதைக் காண்பதால், மன்னிப்பவராகவும் கருணையா ளராகவும் இருக்கின்றார்.
[24:32] உங்களில் திருமணமாகாத நபர்களைத் திருமணம் புரிந்து கொள்ள நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருந்தால், உங்கள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிலுள்ள நன்னெறியுடையவர்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கடவுள் தன் அருளிலிருந்து அவர்களைச் செல்வந்தர்களாக்குவார். கடவுள் தாராள மானவர், அறிந்திருப்பவர்.
[24:34] தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையும், மேலும் கடந்தகாலத் தலைமுறைகளிலிருந்து உதாரணங் களையும், மேலும் நன்னெறியுடையோருக்கு ஒரு ஞான உபதேசமாகவும் இதனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.