குர்ஆன் 24:34 — ஒளி
தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையும், மேலும் கடந்தகாலத் தலைமுறைகளிலிருந்து உதாரணங் களையும், மேலும் நன்னெறியுடையோருக்கு ஒரு ஞான உபதேசமாகவும் இதனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
[24:33] திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்கள், கடவுள் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கும்வரை ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.உங்கள் ஊழியர்களில் திருமணம் செய்து கொள்வதற்காக விடுதலையடைய விரும்புபவர்களுக்கு, அவர்கள் நேர்மையான வர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டால், அவர்களுடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு அவர் அளித்துள்ள கடவுள்-ன் பணத்திலிருந்து, அவர்களுக்குக் கொடுங்கள். உங்களுடைய பெண் களை, அவர்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், இவ்வுலகப் பொருட்களை தேடி அவர்களை விபச்சாரம் செய்வதற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம். எவரேனும் அவர்களை நிர்பந்தித்தால், பின்னர் கடவுள், அவர்கள் நிர்பந்திக்கப்படுவதைக் காண்பதால், மன்னிப்பவராகவும் கருணையா ளராகவும் இருக்கின்றார்.
[24:35] கடவுள் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக உள்ளார். அவருடைய ஒளிக்கு உதாரணமாவது, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப் பட்டுள்ள, ஒரு விளக்கின் பின்னாலுள்ளதொரு குழிகண்ணாடியைப் போன்றதாகும். அக் கண்ணாடிக் குடுவை முத்தைப் போல் பிரகாசமானதொரு நட்சத்திரத்தைப் போன்று ள்ளது. அதற்குரிய எரிபொருள், கிழக்கத்தியது மல்லாத, அன்றி மேற்கத்தியதுமல்லாத, அருள் பாலிக்கப்பட்டதொரு எண்ணெய் தரும் மரத்திலிருந்து வழங்கப்படுகின்றது. அதன் எண்ணெய் ஏறத்தாழ சுயமாகவே ஒளிர்கின்றது; அதனை மூட்டுவதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. ஒளிக்கு மேல் ஒளி. கடவுள் (வழிநடத்தப்படவேண்டும் என) நாடுகின்ற எவரையும் தன் ஒளியின் பால் வழிநடத்துகின்றார். நீதிபோதனைகளை மனிதர்களுக்குக் கடவுள் இவ்விதமாக எடுத்துரைக்கின்றார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.