குர்ஆன் 24:35 — ஒளி
கடவுள் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக உள்ளார். அவருடைய ஒளிக்கு உதாரணமாவது, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப் பட்டுள்ள, ஒரு விளக்கின் பின்னாலுள்ளதொரு குழிகண்ணாடியைப் போன்றதாகும். அக் கண்ணாடிக் குடுவை முத்தைப் போல் பிரகாசமானதொரு நட்சத்திரத்தைப் போன்று ள்ளது. அதற்குரிய எரிபொருள், கிழக்கத்தியது மல்லாத, அன்றி மேற்கத்தியதுமல்லாத, அருள் பாலிக்கப்பட்டதொரு எண்ணெய் தரும் மரத்திலிருந்து வழங்கப்படுகின்றது. அதன் எண்ணெய் ஏறத்தாழ சுயமாகவே ஒளிர்கின்றது; அதனை மூட்டுவதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. ஒளிக்கு மேல் ஒளி. கடவுள் (வழிநடத்தப்படவேண்டும் என) நாடுகின்ற எவரையும் தன் ஒளியின் பால் வழிநடத்துகின்றார். நீதிபோதனைகளை மனிதர்களுக்குக் கடவுள் இவ்விதமாக எடுத்துரைக்கின்றார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[24:34] தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையும், மேலும் கடந்தகாலத் தலைமுறைகளிலிருந்து உதாரணங் களையும், மேலும் நன்னெறியுடையோருக்கு ஒரு ஞான உபதேசமாகவும் இதனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
[24:36] கடவுள்-ஆல் உயர்த்தப்பட்ட வீடுகளில் (கடவுளின் வழிகாட்டல் காணப்படுகின்றது), ஏனெனில் அங்கு அவருடைய பெயர் நினைவு கூரப்படுகின்றது. அங்கு இரவும், பகலும் அவர் துதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்-