Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:37 — ஒளி

தொழில் அல்லது வியாபாரத்தினால் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து திசை திருப்பப்படாத மக்கள்; அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள், மேலும் மனங்களும் மற்றும் கண்களும் திகிலடைந்து விடும் அந்நாள் குறித்து அவர்கள் எச்சரிக் கையுடன் இருப்பார்கள்.

[24:36] கடவுள்-ஆல் உயர்த்தப்பட்ட வீடுகளில் (கடவுளின் வழிகாட்டல் காணப்படுகின்றது), ஏனெனில் அங்கு அவருடைய பெயர் நினைவு கூரப்படுகின்றது. அங்கு இரவும், பகலும் அவர் துதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்-

[24:38] அவர்களுடைய நல்ல காரியங்களுக்காகக் கடவுள் அவர்களுக்கு நிச்சயமாக வெகுமதி வழங்குவார், மேலும் தனது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிவார். தான் நாடுகின்றோருக்குக் கடவுள் அளவின்றி வழங்குகின்றார்.