Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:38 — ஒளி

அவர்களுடைய நல்ல காரியங்களுக்காகக் கடவுள் அவர்களுக்கு நிச்சயமாக வெகுமதி வழங்குவார், மேலும் தனது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிவார். தான் நாடுகின்றோருக்குக் கடவுள் அளவின்றி வழங்குகின்றார்.

[24:37] தொழில் அல்லது வியாபாரத்தினால் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து திசை திருப்பப்படாத மக்கள்; அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள், மேலும் மனங்களும் மற்றும் கண்களும் திகிலடைந்து விடும் அந்நாள் குறித்து அவர்கள் எச்சரிக் கையுடன் இருப்பார்கள்.

[24:39] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய செயல்கள் பாலைவனத்திலுள்ளதோர் கானலைப் போன்றதாகும். தாகமுள்ள ஒரு மனிதன் அதனைத் தண்ணீரென்றே நினைக்கின்றான். ஆனால் அவன் அதனை அடையும் போது, அது ஒன்றுமேயில்லை என்பதை அவன் காண்கின்றான், மேலும் அதற்கு மாறாக, அவனுடைய செயல்களுக்கு அவனை முற்றிலும் பழிதீர்ப்பதற்காகக், கடவுள்-ஐ அங்கே அவன் காண்கின்றான். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்காளர்.