குர்ஆன் 24:4 — ஒளி
எவர்கள் திருமணமான பெண்கள் மீது விபச்சாரக் குற்றம்சாட்டிவிட்டு, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரத் தவறு கின்றனரோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சவுக்கடிகள் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து எந்தச் சாட்சியத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.
[24:3] விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்யும் ஒருத்தியையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருத்தியையோ திருமணம் செய் வதில் சென்று முடிவான், மேலும் விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்யும் ஒருவனையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவனையோ திருமணம் செய்வதில் சென்று முடிவாள். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.
[24:5] அதன்பின்னர் அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொண்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.