குர்ஆன் 24:5 — ஒளி
அதன்பின்னர் அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொண்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[24:4] எவர்கள் திருமணமான பெண்கள் மீது விபச்சாரக் குற்றம்சாட்டிவிட்டு, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரத் தவறு கின்றனரோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சவுக்கடிகள் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து எந்தச் சாட்சியத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.
[24:6] வேறு சாட்சிகள் எதுவுமின்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கைத் துணைகளைக் குற்றம் சாட்டுபவர்களைப் பொறுத்தவரை, அவர் உண்மையையே கூறுவதாக நான்கு முறை கடவுள் மீது சத்தியம் செய்தால், பின்னர் அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.