குர்ஆன் 24:51 — ஒளி
அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளிக்கப் படுவதற்காக கடவுள்-இடமும், அவருடைய தூதரிடமும், அழைக்கப்படும் போதெல்லாம், நம்பிக்கையாளர்களின் கூற்று, “ நாங்கள் செவியேற்றோம் மேலும் நாங்கள் கீழ்ப்படிகின் றோம்“ என்பதாகவே இருந்தது. இவர்கள் தான் வெற்றியாளர்கள்.
[24:50] அவர்களுடைய இதயங்களில் ஒரு நோய் இருக்கின்றதா? அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களா? கடவுள்-ம் அவரு டைய தூதரும் தங்களை நியாயமில்லாமல் நடத்தக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின் றனரா?உண்மையில், அவர்கள் தான் அநியாயக்காரர்களாக உள்ளனர்.
[24:52] கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் கடவுள்-இடம் பயபக்தி கொண்டு மேலும் அவரை கவனத்தில் கொள்பவர்கள், இவர்கள் தான் பெரும் வெற்றி பெற்றவர்கள்.